பெங்களூர் அக்ரஹாரா சிறையில் உள்ள அ.தி.மு.கவின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிக்கலாவை அ.ம.மு.கவின் பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இதன்போது நன்னடத்தையின் அடிப்படையில் சசிக்கலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய சிறை நிர்வாகம் மறுத்துவிட்ட நிலையில், அவரை விடுதலை செய்வதற்காக சட்டப்படி நடவடிக்கைகளை எடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் சிறைவாசம் இருக்கும் அவர், நன்னடத்தை விதிகளின் கீழ் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.