தொடர்பான சர்ச்சை கருத்து குறித்து கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு திறந்த நீதிமன்றம் முன் வாக்குமூலம் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
தனது சட்டத்தரணி ஊடாக அவர் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கை மீதான ஆராய்வின் போது கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி அந்த வாக்குமூலத்தை வழங்க முடியும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு ஜூலையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீள கட்டியெழுப்பப்பட வேண்டும் என கருத்து வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்த நிலையில், தென்னிலங்கை அரசியல்வாதிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
அத்துடன், அவர் மீது கொழும்பு திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவால் முறைப்பாடு அளிக்கப்பட்டது. இதற்கமைய அவர் திறந்த நீதிமன்றம் முன் வாக்குமூலம் வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.