சிரியா விவகாரம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தைக்கு புறப்பட்ட துருக்கி ஜனாதிபதி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு கூறினார்.
குர்து போராளிகள் மீதான துருக்கியின் எல்லை தாண்டிய தாக்குதல் 5 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது.
இந்நிலையில் குர்து போராளிகள் சிரியாவிற்குள் நிறுவ விரும்பும் “பாதுகாப்பான வலயத்தை” விட்டுவிட வேண்டும் என்று துருக்கி தெரிவித்துள்ளது.
இருப்பினும் நூற்றுக்கணக்கான குர்திஷ் போராளிகள் சிரியாவின் வடகிழக்கு எல்லைக்கு அருகில் நிலைகொண்டுள்ளதாக துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வடக்கு சிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெற முடிவு செய்ததைத் தொடர்ந்து, துருக்கி தனது எல்லை தாண்டிய நடவடிக்கையை கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.