போலியான வாக்குறுதிகளை முன்வைக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சுதந்திர கட்சி உத்தியோகப்பூர்வமாக இணைந்துள்ளமை ஐக்கிய தேசிய கட்சிக்கு பாரிய சவாலாக அமையும் குறிப்பாக தேர்தலுக்கு முன்னர் பலர் எம்மோடு இணைந்துகொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதார கொள்கைக்கு முரணாகவே சுதந்திர கட்சி உருவாக்கப்பட்டது என்றும் அவ்வாறான நிலையில் இரு தரப்பினரும் ஒருபோதும் இணைந்து செயற்பட முடியாது என்பது கடந்த வருடத்தில் வெட்டவெளிச்சமானது என்றும் கூறினார்.
இதேவேளை தேசிய அரசாங்கத்திலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியேறியமை சிறந்த அரசியல் தீர்மானமாகும் என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவே வெற்றியினை தீர்மானிக்கும் என தெரிவித்த அவர் தேர்தல் வெற்றிக்காக ஒருபோதும் போலியான வாக்குறுதிகளை முன்வைக்க மாட்டோம் என்றார்.