வின்னிபெக்கின் ஆலன் ரைக்கிள் ஷினிட்கர் என அடையாளம் காணப்பட்டுள்ள அவர், ஆபத்தானவர் எனவும், அவரிடம் பொதுமக்கள் அணுக வேண்டாமென எச்சரிக்கப்படுகின்றனர்.
இவர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்காக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஷ்னிட்கர் 30, ஐந்து அடி 10 அங்குலம் மற்றும் 161 பவுண்ஸ்கள், பழுப்பு நிற முடி மற்றும் நீல நிற கண்கள் கொண்டவர் என பொலிஸார் விபரித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் 27 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார், இதில் ஆயுதம் ஏந்திய தாக்குதல், வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்படுதல், துப்பாக்கியால் சுடுவது மற்றும் உடல் ரீதியான தீங்கு விளைவிக்கும் தாக்குதல் அடங்கும்.
இந்த கொள்ளை சம்பவத்தில், மூன்று அல்லது நான்கு பேர் வீட்டிற்குள் நுழைந்து, அவர்களை துப்பாக்கி முனையில் அறைக்குள் அடைத்து வைத்துவிட்டு பின்னர் கொள்ளையிட்டு செல்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏனையவர்கள், முகமூடி அணிந்திருந்ததால், அவரை அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.