எட்டு வயதான ஒஸ்கார் ரைரிங்கர் (Oscar Taitinger) மற்றும் அவரது தந்தை மார்க் ரைரிங்கர் (Mark Taitinger) ஆகிய இருவரின் சடலங்களே நேற்று (வியாழக்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஒஸ்கார் ரைரிங்கரின் தாய் கூறுகையில், ’25 வருட திருமணத்திற்குப் பிறகு இந்த கோடையில் மார்க்குடன் இருந்து பிரிந்ததாகவும், ஒஸ்கார் மூன்று சிறுவர்களில் இளையவர் எனவும் இவர் வீடியோ கேம்களை விளையாடுவதில் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தாகவும்’ கூறினார்.
எனினும், இந்த மரணத்திற்கான காரணத்தை வெளியிடாத பொலிஸார், இவர்களின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடாத பொலிஸார், இதுகுறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.