எண்ணிக்கை, கணிசமான அளவு குறைந்துள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் பிரிவினரின் ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது.
கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைந்து செல்வதாக, குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டில் நாட்டில் 68,562 பொலிஸ் அதிகாரிகள் பணியில் இருந்ததாகவும், இந்த தொகை 2017ஆம் ஆண்டைவிட 463 குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய பொலிஸ் அதிகாரிகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் உள்ளதாகவும், ஒன்ராறியோவில் 25,327 பொலிஸார் கடமையில் உள்ளதாகவும், கியுபெக்கில் 15,884 பொலிஸ் அதிகாரிகள் பணியில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தரவின் பிரகாரம் சராசரியாக கனடாவில் ஒரு இலட்சம் பேருக்கு 185 பொலிஸ் அதிகாரிகள் என்ற அடிப்படையில் கடமையில் உள்ளதனை உணர்த்துகின்றது.
கனடாவின் வடமேற்கு பிராந்தியங்களில் 240 பேருக்கு ஒரு பொலிஸ் என்ற அடிப்படையில் பொலிஸார் உள்ளனர். இதில் மிகக் குறைந்த வீதமாக பிரின்ஸ் எட்வர்ட் தீவு உள்ளது. இத்தீவில் 709 பேருக்கு ஒரு பொலிஸ் அதிகாரி என்ற அடிப்படையிலேயே பொலிஸாரின் எண்ணிக்கை உள்ளது.
தற்போது கனேடிய பொலிஸ் சேவையில் உள்ள 50 வயதுக்கு மேற்பட்ட உத்தியோகத்தர்களின் வீதமும் அதிகமாக உள்ளதாகவும், சேவையில் இருக்கும் 11 சதவீத பொலிஸ் உத்தியோகத்தர்கள் முழு ஓய்வூதியத்துடன் ஓய்வுபெறத் தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் அவர்கள் ஒய்வுப் பெற்றால் இந்த எண்ணிக்கை மேலும் குறையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.