சேவையாக மாற்றுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலகத்தினால் அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதனை அச்சிடுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே குறிப்பிட்டார்.
இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வௌியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ரயில்வே ஊழியர்கள் தொடர்ச்சியாக இன்று (வியாழக்கிழமை) 8ஆவது நாளாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதனால் பொதுப் போக்குவரத்தில் பயன்படுத்தும் பொதுமக்கள் பெரும் அசௌகரியர்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.