ஒரு சமாதான திட்டம் சுமூகமாக முன்னேற்றம் கண்டு வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில் இன்று (வியாழக்கிழமை) இந்த குற்றச்சாட்டினை சிரிய ஜனநாயக படைகள் முன்வைத்துள்ளன.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அந்த படை, போர்நிறுத்தத்தை மீறி மூன்று கிராமங்களைத் தாக்கியதாகவும் இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் நிறுத்த முடிவுக்கு தங்கள் படைகளின் முழு அர்ப்பணிப்புடன் அப் பகுதியிலிருந்தும் படைகள் திரும்பப் பெற்ற போதிலும், துருக்கிய அரசு மற்றும் அதனுடன் இணைந்த பயங்கரவாத பிரிவுகள் இன்னும் போர்நிறுத்த நடவடிக்கையை மீறுகின்றன குற்றம் சாட்டியுள்ளது.
எனவே இந்த விடயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்றும் குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயக படைகள் கேட்டுக்கொண்டுள்ளன.