பிரிட்டிஷ் கொலம்பியா- சர்ரே பகுதியில் பெண்னொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், ஒருவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டவுன்ஹவுஸ் வளாகம் 5800 தொகுதி- 122ஆவது வீதியில் நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) பெண்னொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், ஒருவரை பொலிஸ் காவலில் வைத்துள்ளனர்.
ஆணும் பெண்னும் ஒருவருக்கொருவர் தெரிந்திக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ள பொலிஸார், இந்த மரணம் குழுவாக இணைந்து நடத்தப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒருங்கிணைந்த மனிதக் கொலை புலனாய்வுக் குழு, தற்போது இது தொடர்பான தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.