பிளாக் கிரீக் ட்ரைவின் கிழக்கே ட்ரெத்வியூ ட்ரைவ் அருகே கிளியர்வியூ ஹைட்ஸ் பகுதியில் உள்ள தாழ்வான அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்றுப் புதன்கிழமை இரவு 7:30 அளவில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
இதில், இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் அடங்குவதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இரண்டு பெண்களும் 16 மற்றும் 17 வயதுடையவர்கள் என்றும் மூன்று ஆண்களும் 16 தொடக்கம் 18 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காயங்கள் கடுமையானவை எனவும் உயிராபத்தானவை என்றும் பொலிஸார் விவரித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தபோது, கருப்பு நிற வாகனத்தில் மூவர் தப்பிச் சென்றதனை அவதானித்துள்ளனர்.
இவர்கள் மூவரும் பதின்ம வயதுடையவர்கள் என்று குறிப்பிட்டுள்ள பொலிஸார், இவர்களைக் கைதுசெய்ய தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.