ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் கூறுகையில், ஐக்கிய தேசியக் கட்சி இவ்வளவு தூரத்துக்கு குழப்பகரமான சூழ்நிலைக்குத் தள்ளப்படும் என்று நான் எப்போதும் நினைக்கவில்லை. எந்தவொரு வேலைத்திட்டம் தொடர்பாகவும் அவர்கள் பேசுவதில்லை.
எமது வேட்பாளரை குறை கூறுவதுதான் அவர்களின் பிரதான தேர்தல் பிரசாரமாக இருந்து வருகிறது. மக்கள் எதிர்ப்பார்க்கும் வேலைத்திட்டம் அவர்களிடம் இல்லை. தேவையில்லாத கருத்துக்களையே அவர்கள் கூறிவருகிறார்கள்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, குருநாகலில் இருந்து ஹம்பாந்தோட்டை வரை தொழிற் பேட்டைகளை அமைப்பதாக கூறி வருகிறார். பின்னர் யாழ்ப்பாணத்திற்கு சென்று, காங்கேசன் துறையிலிருந்து தெவுந்தரதுடுவ வரை தொழிற் பேட்டைகளை அமைப்பதாக கூறுகிறார்.
இதேவேளை, எமது எதிர்கால ஜனாதிபதி ஒழுக்காமான ஒரு நாட்டை ஸ்தாபிப்பதிலேயே முனைப்பாக இருக்கிறார். இதனை நாம் நிச்சயமாக மேற்கொள்வோம்” என்று தெரிவித்தார்.