உலகளாவிய ரீதியில் நினைவு கூரப்படவுள்ளது.
அதனை மையமாகக் கொண்டு இலங்கையில் எதிர்வரும் ஒருவார காலப் பகுதி தபால் வாரமான பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் நாளை மூன்று வகையான முத்திரைகள் வெளியிடப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
சர்வதேச தபால் தினத்தை முன்னிட்டு நாளை ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகள் தொடர்பாகவும் தபால் துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாகவும் தெரியப்படுத்தும் கூட்டம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன்போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.