தனது உடல் நிலையை கருத்திற்கொண்டு இடைக்கால பிணை கோரி பா.சிதம்பரம் நீதிமன்றத்தில் மனுவொன்றினை தாக்கல் செய்திருந்த நிலையில் குறித்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
இதன்போது பா.சிதம்பரத்திற்கு இடைக்கால பிணை வழங்க அமுலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பா.சிதம்பரம் சார்பில் முன்னிலையான சட்டதரணி சிதம்பரத்தின் உடல்நிலையை கருத்திற்கொண்டு அவரை பிணையில் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பா.சிதம்பரத்தின் இடைக்கால பிணை குறித்து எவ்வித உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் சிதம்பரத்தின் உடல்நிலை குறித்த அறிக்கையை வெள்ளிக்கிழமைக்குள் அளிக்கும்படி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.