அவரை ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்லுமாறு உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிகழமை) உத்தரவிட்டது.
மேலும் ப.சிதம்பரம் வெளிநாடு செல்லக்கூடாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளையும் நீதிபதிகள் விதித்தனர்.
இதேநேரம் ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கிலும் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை, 7 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே, சி.பி.ஐ வழக்கில் பிணை பெற்றாலும் ப.சிதம்பரம் உடனடியாக சிறையில் இருந்து வெளிவர முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி கைது செய்தது. அதன்பின்னர் அவர் டெல்லி திகார் சிறையில் தடுத்துவைக்கப்பட்டார்.
அதன்பின்னர் பிணை கோரி அவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சி.பி.ஐ நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனைடுத்து பிணை கோரி ப.சிதம்பரம் சார்பில் உயர் நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ப.சிதம்பரத்தின் பிணை மனு மீது சி.பி.ஐ. பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
அதன்படி சி.பி.ஐ பதில் மனு தாக்கல் செய்தது. சி.பி.ஐ தாக்கல் செய்த மனுவில் ப.சிதம்பரத்திற்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்தது. அதன்பின்னர் பிணை மனு மீதான விசாரணைகள் தொடந்து இடம்பெற்று வந்த நிலையில், அவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.