சால்டர் மற்றும் சார்ள்ஸ் வீதிகளுக்கு இடையில் உள்ள பிரிட்சார்ட் அவென்யூ பகுதியில் உள்ள வீட்டிற்கு நேற்று (புதன்கிழமை) அதிகாலை 2:30 மணியளவில் இந்த குழந்தை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டது.
இதன்பிறகு உயிராபத்தான நிலையில், அந்தக் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. தற்போது குழந்தை குடும்பத்தினரின் ஆதரவில் இருப்பதாக கூறப்படுகின்றது.
குழந்தையின் தாயும் அவரது முன்னாள் காதலனும் சண்டையிட்டபோது, உறங்கிக்கொண்டிருந்த குறித்த குழந்தையின் கழுத்தில் குத்தப்பட்டிருக்க கூடுமென குடும்பத்தினர் நம்புகின்றனர்.
எனினும், இச்சம்பவம் குறித்து எவ்வித குற்றச்சாட்டும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. அத்தோடு குடும்ப நலன்கருதி குடும்பத்தினரின் பெயர் விவரங்களையும் பொலிஸார் வெளியிடவில்லை.