இன்று இடம்பெறவிருந்த வடக்கு கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் ஐந்து தமிழ் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளாத நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இன்று மாலை ஆரம்பமான இந்தச் சந்திப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இருப்பினும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் எதிர்வரும் 30ம் திகதி நடைபெறும் சந்திப்பின் பின்னரே, ஜனாதிபதி வேட்பாளர்களைச் சந்திப்பது, யாரை ஆதரிப்பதென்ற நிலைப்பாடு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டவுள்ளது.