மோடியை இன்று (சனிக்கிழமை) சந்தித்த அவர் ஜம்மு காஷ்மீர் நிலைவரம் குறித்து விவாதித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இரத்துச் செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேச அந்தஸ்து வரும் 31ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு கிரிஷ் சந்திரா முர்மு, லடாக் யூனியன் பிரதேசத்துக்கு ஆர்.கே.மாத்தூர் ஆகியோரை புதிய ஆளுநர்களாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்து உத்தரவிட்டார்.
தற்போது ஜம்மு காஷ்மீர் ஆளுநராக செயற்பட்டு வந்த சத்யபால் மாலிக்கை கோவா ஆளுநராக மாற்றப்படுகிறார். இந்நிலையில், சத்யபால் மாலிக் மோடியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது