வாழ்க்கை செலவிற்கு ஏற்றார்போல் மகாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவை அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மாணவர்களை கைது செய்தமையை கண்டித்து வந்தாறுமூலை கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) வந்தாறுமூலை கிழக்குப்பல்கலைக்கழக வாளாகத்தின் முன் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நேற்றயதினம் கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தி கைதுசெய்ததை எதிர்த்தும், அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.