தொடர்பில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் மிருகவதை தடுப்பு அமைப்பு, சர்ரேயில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் மீது இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டிலிருந்து பறவைகள் எவையும் கைப்பற்றப்படாத நிலையில், ஆதாரங்கள் சிலவற்றை கைப்பற்றியுள்ள அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஆதாரங்களை வைத்து அந்த இடத்தில் குற்றங்கள் இடம்பெற்றனவா என்பதை ஆராய்ந்து வருவதாக மிருக வதை தடுப்பு அமைப்பின் தலைமை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
கால்நடைகள் மீதான வன்முறை குற்றவியல் சட்டத்தின் இரண்டு பிரிவுகளின் கீழ் குற்றம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதல் பிரிவு, பறவைகள் சண்டையை வைத்து பணம் ஈட்டுபவர்கள், அதற்கு உதவியாக இருப்பவர்கள் குற்றவாளிகளாவர்.
இரண்டாவது பிரிவின்படி, விலங்குகள் சண்டைக்கான ஒரு இடத்தை ஆயத்தம் செய்வது அல்லது அதற்கு இடத்தை அளிப்பது ஆகியவையும் குற்றமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 10,000 கனேடிய டொலர்கள் அபராதம் விதிக்கப்படுவதோடு, 18 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் வழங்கப்படும்.
அதே குற்றத்தை இரண்டாவது முறை செய்பவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
அத்துடன் விலங்குகளை தம்வசம் வைத்துக்கொள்ள, சம்பந்தப்பட்டவர்களுக்கு வாழ்நாள் தடையும் விதிக்கப்படும்.
குற்றம் அண்மையில்தான் நடைபெற்றுள்ளது என்பதால், சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண சிறிது காலம் பிடிக்கும் என மிருக வதை தடுப்பு அமைப்பின் தலைமை அலுவலரான மேர்ச்சி மொரியாட்டி(Marcie Moriarty) தெரிவித்துள்ளார்