தேசிய மக்கள் சக்தியின் தேசிய விவசாயக் கொள்கை இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் வெளிப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாட்டில் விவசாயத் துறையில் மாற்றத்தை கொண்டுவரவும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதுமே தனது நோக்கம் என கூறினார்.
மேலும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அவர்களின் உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான மற்றும் உத்தரவாத விலைகளை நிர்ணயிப்பதாகவும் உறுதியளித்தார்.
அத்தோடு நாட்டில் வெவ்வேறு பருவங்களில் விலைகளின் ஏற்ற இறக்கங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த அனுரகுமார திசாநாயக்க, இதுபோன்ற விலை ஏற்ற இறக்கங்கள் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்றும் சாடினார்.