தொடர்பாக, ஒன்ராறியோ மாகாணப் பொலிஸார், பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
நெடுஞ்சாலை 401இல், வூட்ஸ்ரொக்கிற்கு கிழக்கே இடம்பெற்ற விபத்தில், பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், உயிரிழந்தவர் தொடர்பான பெயர் விபரங்கள் எதையும் வெளியிடவில்லை.
இதற்கிடையில் இவ்விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சாரதியை, பொலிஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இந்த நிலையில், சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அல்லது தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு ஒன்ராறியோ மாகாணப் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.