இன்று (வியாழக்கிழமை) காலை மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்கர்களை சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கையை தயாரித்த குழுவில் குற்றம் சுமத்தப்பட்ட சிலர் உள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் இணைந்து அறிக்கை ஒன்றை தயாரிக்கும் போது, அது பக்கச்சார்பானதாகவே இருக்கும் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
அத்தோடு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அச்சுறுத்தலாக இருப்பார் என்பதை அவர்கள் முன்னரே அறிந்துள்ளனர் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.