பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டால் அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக வடக்கு முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் இன்று (வியாழக்கிழமை) காலை நல்லூரிலுள்ள விக்னேஸ்வரனின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்தனர்.
இதன்போது விக்னேஸ்வரனை பொதுவேட்பாளராக களமிறங்கும்படி சிவில் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை மறுத்த அவர் கட்சி சார்பில்லாத பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டால் அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து, கட்சி சார்பற்ற பொதுவேட்பாளரை அடையாளம் காணும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது என அறியமுடிகின்றமை குறிப்பிடத்தக்கது