சிபா மற்றும் புகுஷிமா மாகாணங்கள் கன மழை மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஹபிகிஸ் என்ற சக்திவாய்ந்த சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஏற்பட்ட இந்த பேரழிவில் மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கன மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள இடங்களில் உள்ள சுமார் 80 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.