மாதங்களுக்குள் விவசாயிகளால் பெறப்பட்ட நுண்கடன்கள் உட்பட அனைத்து கடன்களையும் இல்லாமல் செய்வோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், ஜனாதிபதித் தேர்தலுக்கான முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று (புதன்கிழமை) அநுராதபுரத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.
குறிப்பாக இளைஞர்களுக்கான கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கும் தனது முதல் வரவுசெலவு திட்டத்தில் கல்வித்துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்தார்.
அத்தோடு விவசாயிகளுக்கான சலுகைகளை அதிகரிப்பதாகவும், ஏழைகளின் தரத்தை உயர்த்துவதாகவும் உறுதியளித்த கோட்டாபய ராஜபக்ஷ கிராமப்புறங்களில் வசிப்பவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது தங்கள் கடமை எனவும் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கில் போரின் பின்னர் பொருளாதாரத்தில் மிகவும் நலிந்து காணப்படும் மக்களிடத்தில் நுண்கடன் பிரச்சினை பூதாகரமாகியுள்ளது.
இந்த நுண்கடன் பிரச்சினை காரணமாக குடும்பப் பிரிவு, தற்கொலை முயற்சி என்பவற்றுக்கும் இதுவே வழி ஏற்படுத்துகிறது என்று விமர்சிக்கப்படுகிறமை இங்கு குறிப்பிடத்தக்கது.