இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நரை தேடிவரும் பொலிஸார், தாக்குதல் தொடர்பிலான காணொளி ஆதாரத்தினைகொண்டு அவரை தேடி வருகின்றனர்.
அத்தோடு, சந்தேக நபரின் அடையாளங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், அவரை கைது செய்ய பொதுமக்கள் உதவி செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர், சுமார் ஆறு அடி உயரமுள்ள 35 வயது ஆண் என பொலிஸார், விபரித்துள்ளனர்.
யாங்கே வீதிக்கு வடக்கே விக்டோரியா வீதி மற்றும் டன்டஸ் வீதிப் பகுதியில், இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது பெண் ஒருவர் சுத்தியலால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.