சர்தார் வல்லபாய் பட்டேலின் 144ஆவது பிறந்த நாளையொட்டி குஜராத்தில் உள்ள அவரது பிரமாண்ட சிலைக்கு மரியாதை செலுத்தியப்பின் உரையாற்றிய மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், நாட்டு மக்களின் ஒற்றுமை விசித்திரமானது என்று உலக நாடுகள் உணர்வதாகவும் ஆனால் இந்தியர்களான நமக்கு இது உயிர்நாடி எனவும் தெரவித்தார்.
இதுவரை முறியடிக்க விரும்பியவர்களின் முயற்சி பலனளிக்காமல் போனதாகவும் பிரதமர் நரேந்தி மோடி தனது உரையில் தெரிவித்தார்.
இந்தியாவுடன் போரிட்டு வெல்ல முடியாதவர்கள் அதன் ஒற்றுமைக்கு சவால் விடுக்கிறார்கள் என்றும் அவர்களின் பல முயற்சிகளுக்குப் பிறகும் இந்தியாவின் ஒற்றுமையை குலைக்க முடியாமல் போயுள்ளது என்றும் கூறியுள்ளார்.