LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, October 25, 2019

நாம் ஆட்சிக்கு வந்தால் சாய்ந்தமருது பிரதேச சபை மலரும் – மஹிந்த ராஜபக்ஷ

நாம் ஆட்சிக்கு வந்தால் சாய்ந்தமருது பிரதேச சபை மலரும் என பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து தேர்தல் பிரசாரமொன்று அம்பாறை, சாய்ந்தமருதில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் மையோன் முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக மகிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.

அவர் கூறுகையில், கல்முனை மாநாகரம் அதிநவீன நகரமாக மாற்றப்படும். தற்போது கடலில் காணப்படுகின்ற படகுகள் இங்கு இருக்க வேண்டியவை அல்ல. இவைகள் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட வேண்டியவை. அதற்கு நிச்சயமாக துறைமுகத்தை அமைத்து தருவேன்.

மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு பாதுகாப்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.


சாய்ந்தமருது மக்கள் விரும்பும் பிரதேச சபையை அமைத்து தருவேன். ஆனால் நாங்கள் ஆட்சியமைத்தால் நகர சபையாகவும் மாற்றித் தருவேன். பயங்கரவாத பிடியில் இருந்து உங்களைப் பாதுகாத்து பள்ளிவாசல் வீடுகளில் முடங்கி இருந்தவர்களை வெளியில் கொண்டடுவந்தவர்கள் நாங்கள்.

ஆனால் முஸ்லிம்களுக்கான தொழுகையைக் கூட முடக்கியது இந்த ஆட்சியில் தான். ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஒரு தேவாலயத்தில் குண்டுவெடிக்கப் போகின்றது என்று தெரிந்தும் கூட ஒரு அமைச்சர் தன்மகனை தேவாலயத்திற்கு செல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டார். தானும் செல்லவில்லை. ஆனால் தாக்குதலில் அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்காக உயிரிழந்தார்கள்.

இன்றைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தான் நித்திரை கொள்ளாமல் நாட்டை பாதுகாப்பேன் என்று சொல்கின்றார். இவர் நித்திரை செய்கின்றாரா இல்லையா என்று நாங்கள் பார்க்கவா முடியும்?

ஆகவேதான் எங்களுக்கு எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் உங்களுடைய பரிபூரண ஆதரவை தாருங்கள். நாங்கள் நாயைப் போன்று எங்களது ஆட்சியில் உங்களை பாதுகாப்போம். இருந்தபோதும் இந்த நாய்க்கு பைத்தியம் பிடித்தால் எவ்வாறு உங்களை பாதுகாக்கும் என்பதையும் அறிவீர்கள்” என்று தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7