குருநாகலில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, ராஜபக்ஷக்களின் அரசாங்கம் நாட்டில் எதனை மேற்கொண்டது?
பல்வேறு வழிகளிலும் கடனைப் பெற்றுக்கொண்டு, இந்த நாட்டை கீழ் நோக்கித்தான் கொண்டுசென்றார்கள்.
ஆனால், எமது இந்த 4 வருட ஆட்சியில், உலகமே ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நாடாக இலங்கை மாற்றமடைந்துள்ளது.
இன்று ஜப்பான், சீனா, பிரித்தானியா போன்ற நாடுகள் எம்முடன் பொருளாதார உறவுகளை வைத்துக்கொள்ள தயாராகவே இருக்கிறார்கள்.
எமது காலத்தில்தான் இந்த நிலைமை நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது” என அவர் மேலும் தெரிவித்தார்.