புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டம் தற்போது காலி முகத்திடலில் நடைபெற்று வருகின்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அகிலவிராஜ் மேலும் கூறியுள்ளதாவது “சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக அமர்த்துவதற்கு பலமே இங்கு கூடியுள்ள மக்கள் கூட்டம்தான்.
மேலும் பெரும்பாலானவர்களை எமது கட்சியுடன் இணைத்து அதனை வலிமை சேர்ப்பதற்கு எமது கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் முடிந்துள்ளது.
இதனால் பொதுஜன பெரமுன,எங்களது கட்சி குறித்து எதனையும் கூற முடியாத நிலைமையில் உள்ளது.பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் எம்மால் வெளியிடப்படும் ஒரு சில வார்த்தைகளை எடுத்துக்கொண்டு அதனூடாக ஆதாயத்தை பெற முனைகின்றனர்.
மேலும் எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், வேட்பு மனுவை தாக்கல் செய்ய சென்றபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோர் வரவில்லையா என பொதுஜன பெரமுனவினர் கேட்டனர்.
நாம் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிடுகின்றோம் என்றுகூட தெரியாத முட்டாள்களாகவா பொதுஜன பெரமுனவினர் உள்ளனர்” என கேள்வி எழுப்பியுள்ளார்.