சந்தேக நபர்கள் தொடர்பில் கிடைத்த கண்காணிப்பு ஒளிப்பதிவு ஆதாரத்தினையும், ஒளிப்படங்களையும் பொலிஸார், வெளியிட்டுள்ளனர்.
குறித்த இந்தச் சந்தேக நபர்கள் ஆயுதத்துடன் நடமாடக்கூடும் என்பதனால், அவர்களைக் காண்போர் அவதானமாக இருக்குமாறும், அவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இஸ்லிங்டன் அவென்யூ மற்றும் ரெக்ஸ்டேல் பவுல்வர்ட்டிற்கு கிழக்கே, ஹட்ரியன் டிரைவ் மற்றும் சால்போன்ட் வீதிப்பகுதியில் கடந்த ஐந்தாம் திகதி மாலை ஆறு மணியளவில் இந்தச் வழிபறிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இடந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள ரொறன்ரோ பொலிஸார், 17 வயதுப் பெண் ஒருவர் அந்த வழியே நடந்து சென்று கொண்டிருந்த போது, கறுப்பு நிற கார் ஒன்றில் வந்த இரண்டு பெண்கள், கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த பொருட்களை அபகரித்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளனர்.
மிரட்டலுக்குப் பயந்த குறித்த அந்தப் பெண், தன்னிடம் இருந்த பொருட்களை அவர்களிடம் கொடுத்ததாகவும், பொருட்களை பெற்றுக்கொண்ட இரண்டு பெண்களும் அங்கிருந்து காரில் தப்பித்துச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.