முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
குறித் நினைவேந்தல் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்ததுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, பசுபதிப்பின்னை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.