இதற்காக இலங்கைத் தேயிலை சபையின் நிதியை ஒதுக்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எந்த தடையையும் விதிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தேயிலை சபையின் நிதியை இதற்காக ஒதுக்குவதற்கான அனுமதியை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு கோரியதாகவும், அதன்படி அதற்கான அனுமதி சில தினங்களுக்கு முன்னதாகவே கொடுக்கப்பட்டு விட்டதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த முறை பண்டிகைக்கால முற்பணத் தொகையுடன் 5000 ரூபாயை மேலதிகமாக வழங்குவதற்கு, தேயிலை சபையில் இருந்து பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தது.
எனினும் தேர்தல் காலம் என்பதால் அவ்வாறான சலுகையை வழங்குவதற்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்ததாகவும், இதனால் குறித்த கொடுப்பனவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலக்ராஜ் கூறியிருந்தார்.
இந்நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.