பெரமுன ஆகிய கட்சிகள், கூட்டணியாக களமிறங்கியுள்ளமையினால் கோட்டாபய ராஜபக்ஷ, 6.5 மில்லியனுக்கு மேற்பட்ட வாக்குகளை பெறுவது உறுதியென சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட்டப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தயாசிறி ஜயசேகர மேலும் கூறியுள்ளதாவது, “பொதுஜன பெரமுனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் கை கோர்த்துள்ளமை இலங்கை வரலாற்றில் முக்கியமான நாளாகும்.
மேலும் இந்த நாட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்திய ஒரு கட்சியென்றால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பதை அனைவரும் அறிவார்கள். சாதாரண மக்களும் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த கட்சி முக்கிய பங்காற்றியுள்ளது.
அந்தவகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க , சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோர் முன்னோக்கி கொண்டுச் செல்வதற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றியிருந்தனர்.
அத்தகைய சிறந்த கட்சி, பல்வேறு இன்னல்களுக்கு தற்போதைய காலத்தில் முகம்கொடுத்திருந்தப்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ.ல.சு.க.யின் மத்திய குழு உறுப்பினர்கள், தேர்தல் அமைப்பாளர்கள், ஸ்ரீ.ல.சு.க.வை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் ஆகியோரும் கட்சியை வலுப்படுத்த முயன்றனர்.
மேலும் அவர்கள் எமது கட்சிக்கு ஆரம்பம் முதல் ஆதரவை வழங்கி வருகின்றவர்கள் இன்னும் எங்களுடன்தான் இருக்கின்றார்கள்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனியாக செயற்பட்டு பலமான கட்சியாக மூன்று மாதங்களில் மாற்றமடைந்தது.
இந்த கட்சி நாட்டின் மீதும் மக்கள் மீதும் உண்மையான அக்கறை கொண்டவர்களை இணைத்துக்கொண்டமையினாலேயே முன்னோக்கி சென்றுள்ளது.
மேலும் இக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய, ராஜபக்ஷக்களின் சகோதரர்களாக இருந்தாலும் கூட நாட்டின் புத்திஜீவிகளுக்கு மத்தியில் உருவான நாட்டுப்பற்றுக் கொண்ட தலைவராவார்
ஆகையாலேயே நாமும் பெரும்பாலோரின் விருப்பத்திற்கமைவாகவும் கட்சியை பாதுகாக்கவும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம்.
எனவே ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன் கட்சியையும், நாட்டையும் பாதுகாத்துக் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றிப் பெறச் செய்யும் பயணத்தை தொடரவுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.