54,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக, கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் வேலையின்மை வீதம் 5.7 சதவீதத்திலிருந்து 5.5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 456,000 வேலைகள் அதிகம் உள்ளன. இது வேலைவாய்ப்பு 2.4 சதவீதத்தை உயர்த்தியுள்ளது.
ஒன்ராறியோ மற்றும் நோவா ஸ்கோடியாவில் வேலைவாய்ப்பு வீதம் வளர்ந்ததுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தங்குமிடம் மற்றும் உணவு சேவைகளிலும் குறிப்பிடத்தக்க லாபங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இது கடந்த மாதம் 23,000 வேலைகள் அதிகரித்துள்ளது.