இந்நிலையில் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்தத்துக்காக எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த மாணவர்கள் அதற்கான பாடசாலை அதிபர் ஊடாக மேன் முறையீடுசெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கொழும்பை சுற்றியுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் நாளைய தினம் காலை 9 மணிமுதல் திணைக்களத்துக்கு வந்து பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மேலதிக விபரங்களுக்கு திணைக்களத்தின் 011-2784208, 0112- 2784537, 011- 3188350 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk என்ற முகவரியில் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.