பூண்டுலோயா நகரில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் இடம்பெற்ற நீண்டகால யுத்தம் நிறைவு செய்யப்பட்டு சமாதான பூமியாக இலங்கையை மாற்றியதுடன் நாட்டில் அபிவிருத்தியும் முன்னெடுக்கப்பட்டது.
எனினும் நாட்டில் கடந்த நான்கு வருடங்களாக ஆட்சி செய்தவர்கள் அபிவிருத்தி எதனையும் செய்யவில்லை. எனவே நான்கு இலட்சத்திற்கும் அதிகமானோர் தொழில்வாய்ப்பை இழந்துள்ளனர்.
அதேபோல மஹிந்த ஆட்சிக் காலத்தில் சர்வதேச தேயிலை சந்தையில் இலங்கை தேயிலை முதலாமிடத்திலிருந்தது. இப்போது நான்காவது இடத்திலேயே உள்ளது.
ஆகவே நாங்கள் ஆட்சியமைத்த பின்னர் மலையக தேயிலைத் தோட்ட தொழிற்துறையை விருத்தி செய்து தொழிலாளர்களின் வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுப்பதோடு அவர்களின் பிள்ளைகளின் கல்வி தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்படும்.
அத்துடன் இறப்பர், தென்னை, தொழிற்துறைகளையும் விவசாயத் துறையையும் முன்னேற்ற வேண்டும். எனவேதான் விவசாயிகள் தற்போது பெற்றுள்ள கடன் தொகையை மீளச் செலுத்தாது இரத்துச் செய்வதற்கு ஆட்சியமைத்த பின்னர் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
மேலும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாகவும் அபிவிருத்தி கட்டமைப்பு குறித்தும் கவனம் செலுத்தப்படும்” என அவர் கூறினார்.