செஷயரின் வோரிங்டனைச் சேர்ந்த 38 வயதுடைய ஆணும் பெண்ணும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சாரதியிடம் துப்பறியும் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் புதன்கிழமை அதிகாலையில் எஸ்ஸெக்ஸ் பிராந்தியம் கிரேஸில் உள்ள தொழிற்சாலைப் பகுதியில் ஒரு கொள்கலனில் 39 பேர் உயிரிழந்தநிலையில் அவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
உயிரிழந்தவர்களில் 31 ஆண்கள் மற்றும் எட்டு பெண்கள் அடங்குகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் சீனர்கள் என்றும் நம்பப்படுகிறது.
11சடலங்கள் செல்ம்ஸ்ஃபேர்ட்டில் உள்ள புரூம்ஃபீல்ட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு பிரேதப்பரிசோதனைகள் தொடங்கப்படவுள்ளன.