முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 8 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை ஜனாதிபதி தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக 360 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 09 முறைப்பாடுகளும் மற்றும் வேறு 6 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேற்று மாலை 4.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 106 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக 98 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 4 முறைப்பாடுகளும் மற்றும் வேறு 4 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.