குறித்த விபத்து அந்தப் பகுதியிலுள்ள ஒயில் ஹெரிட்டேஜ் வீதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது காரின் சாரதி படுகாயம் அடைந்தார். அத்துடன் காரில் பயணம் செய்த மூன்று இளைஞர்களும் விபத்து நடைபெற்ற பகுதிலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக நடத்தபட்ட விசாரணையில் இறந்த மூன்று பேரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த விபத்தில் உயிரிழந்த தன்வீர் சிங், குர்விந்தர் சிங், ஹர்பிரீத் கவுர் ஆகிய மூவரும் 20 வயது மதிக்கத்தக்க மாணவர்கள் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவர்களில் தன்வீர் சிங் இந்த வருட ஆரம்பத்தில் கனடாவிற்கு உயர்கல்வியை கற்பதற்காக சென்றிருந்தார். ஹர்பிரீத் கவுர் மற்றும் குர்விந்தர் சிங் ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் கனடாவிற்கு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.