31 வயதான ஷேன் ஓ பிரையன் (Shane O’Brien) என்னும் கொலைக் குற்றவாளிக்கே லண்டன், ஓல்ட் பெய்லி நீதிமன்றம் இவ்வாறு சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
குற்றவாளி ஷேன் ஓ பிரையன், 2015 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 11 ஆம் திகதி அன்று மேற்கு லண்டன், ஹில்லிங்டனில் ஜோஷ் ஹன்சனின் கழுத்தை வெட்டிய பின்னர் நாட்டைவிட்டுத் தப்பியோடினார்.
பொலிஸாரிடம் அகப்படாமல் இருப்பதற்காக தனது தோற்றத்தை மாற்றி ஐரோப்பிய நாடுகளில் மூன்றரை ஆண்டுகளாக தலைமறைவாகியிருந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் கொலைக் குற்றவாளி ஷேன் ஓ பிரையன் ரொமேனியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு பிரித்தானியப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை லண்டன், ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் ஷேன் ஓ பிரையனை குற்றவாளி என்று உறுதிப்படுத்திய நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.