நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“புதிய ஐக்கிய கொன்சர்வேற்றிவ் கட்சி அரசாங்கத்தின் கீழ், அல்பேட்டாவின் பொதுத்துறை வேலைகளை குறைக்கும், உயர் கல்விக்கான உதவித்தொகை – மீளளிப்பு முடக்கம் முடிவுக்கு வரும், நகராட்சி நிதியை குறைத்தல் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களைத் தாமதப்படுத்தும், இவை அனைத்தும் 2023ஆம் ஆண்டுக்குள் சீரான வரவு செலவுத் திட்டத்திற்கு திரும்பும் நோக்கத்துடன் செய்யவுள்ளோம்.
உலகளாவிய நிலைமைகள் மாறினால் அல்லது அல்பேட்டா புதிய குழாய்வழிகளை அணுக முடியாவிட்டால் அரசாங்கம் மேலதிகக் குறைப்புகளைச் செய்யும்.
நான்கு ஆண்டுகளில் வரவு செலவுத் திட்டத்தை சமநிலைப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் சூழ்நிலைகள் மாறினால் அதற்கேற்ப நாங்கள் சரிசெய்வோம்.
இந்த மாகாணத்தில் பல தசாப்தங்களாக நாங்கள் உண்மையில் ஒரு வரவு செலவுத் திட்டத்தைக் கண்டோம். இதன் விளைவாக செயற்பாட்டு செலவினங்கள் குறைக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.