LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, October 13, 2019

கிளிநொச்சியில் உல்லாச விடுதிக்காக தனியாருக்கு வழங்கப்படும் 100 ஏக்கர் காணி – பின்புலம் என்ன?

கிளிநொச்சியில் உல்லாச விடுதி
கட்டுவதற்காக அவுஸ்ரேலிய பிரஜை ஒருவருக்கு 100 ஏக்கர் காணி வழங்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரின் ஆதரவோடு இந்த அரச காணி அவுஸ்ரேலிய பிரஜைக்கு சூட்சுமமான முறையில் வழங்க முற்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள சோழர் காலத்து பழைமை வாய்ந்த இடமான கௌதாரி முனை பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட அரச காணியை வடக்கு மாகாண ஆளுநர், வாசுதேவன் என்ற அவுஸ்ரேலிய பிரஜைக்கு வழங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மக்கள் தங்களது தொழிலை இழக்க நேரிடுவதோடு வாசுதேவனால் அமைக்கப்படும் உல்லாச விடுதிகளுக்காக மணல்மேடுகள் அகற்றப்படுதவால் அப்பகுதியில் உள்ள நன்னீர் கிணறுகள் உப்பு நீராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, அப்பிரதேச மக்களுடன் கடந்த வாரம் ஆளுநர் தரப்பு கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்தியிருந்தது. இந்த கலந்துரையாடலின் போது இராணுவம் மற்றும் பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சம் காரணமாக தங்களது எதிர்ப்பை தெரிவிக்கவில்லை.

இவ்விடயம் தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், “நூறு ஏக்கர் காணியை பிரதேச செயலாளர் தனியொருவருக்கு வழங்குவதால் எங்களது வருங்கால சந்ததிக்கு காணி அற்றுபோய்விடும்.

அத்துடன் பூநகரி பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் விவசாய மற்றும் தொழில் முயற்சிகளுக்கு காணி அற்ற நிலையில் உள்ளார்கள்.

சாதாரண பொதுமக்கள் இரண்டு காணிகள் வைத்திருந்தால் நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் பிரதேச செயலாளர் எவ்வாறு தனியொருவருக்கு 100 ஏக்கர் காணியை வழங்க முடியும்?” என அப்பிரதேச மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதனிடையே, தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் காலங்களில் அரச காணிகளை பகிர்ந்தளிக்க முடியாது என 2048/2 அரச வர்த்தமானியின் பந்தி நான்கில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தும் ஆளுநரினதும் நாடாளுமன்ற உறுப்பினரினரதும் தொடர் அழுத்தம் காரணமாக குறித்த காணிகள் வழங்குவதற்கு பிரதேச செயலகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7