பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய டொரியன் புயலால் உயிரிழந்தவர்களுக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தின் போது மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பஹாமஸ் தீவுகளை அண்மையில் டோரியன் புயல் தாக்கியது. இதில் பொதுமக்கள் 43 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காணாமல் போயிருந்தனர்.
இந்தநிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டம் இடம்பெற்றது.
கூட்டம் ஆரம்பித்ததும் பஹாமஸ் தீவுகளில் டோரியன் புயலினால் உயிரிழந்தவர்களுக்காக மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கரீபியன் பகுதிகளில் உருவான மிகவும் சக்திவாய்ந்த புயல்களில் ஒன்றாக டோரியன் கருதப்படுகின்றது.