அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள், சிறு தொழில் முயற்சியாளர்கள், முன்னாள் போராளிகளுக்கு நிதி நிறுவனங்களினால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட், நிதி அமைச்சின் செயலாளர்கள், அரச வங்கி அதிகாரிகள், மாவட்ட அரச அதிபர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.