அமைச்சர் சஜித் பிரேமதாச, தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் முக்கிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
யாழில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (திங்கட்கிழமை) இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
இதேவேளை இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன, யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இருப்பினும் குறித்த கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை.