மொன்ரியலில், டொரியன் புயலால் பாதிக்கப்பட்ட பஹாமாஸ் வாசிகளுக்காக உலர் உணவுப்பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன.
பஹாமாஸை தாக்கிய டொரியன் புயலால் அதன் இரண்டு தீவுகள் உருக்குலைந்துள்ளதுடன், பலர் அங்கிருந்து வெளியேறி இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.
இவர்களுக்கான உலர் உணவுகளை சேகரிக்கும் பணிகளில் ஜேசன் போர்ப்ஸ் என்பவர் தனது வார இறுதி நாட்களை முழுமையாக அர்ப்பணித்துள்ளார்.
பஹாமாஸில் தனது தூரத்து உறவினர்கள் டொரியன் புயலால் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு உடனடி உதவிகள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது நண்பர்களுடன் சேர்ந்து மொன்றியலில் சேர்க்கப்படும் பொருட்களை புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கிராண்ட் பஹாமா மற்றும் அபாகோ ஆகிய தீவுகளுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் போர்ப்ஸ் தெரிவித்துள்ளார்.