இன்று காலை நான் இந்து கலாசார அமைச்சின் "கலைச்சுடர்" விருது பெறுவதற்காக கொழும்புக்கு பயணித்துக் கொண்டிருக்கையில் நண்பரும் கவிஞருமான அரங்கம் தவராஜா அவர்கள் தொலைபேசியில் செய்தியை சொல்லி வாழ்த்துத் தெரிவிதார்.
அருகில் இருந்த நண்பர் கதிரவன் இன்பராசா அவர்கள் "அது பரிசு கிடைக்கவேண்டிய தொகுப்புத்தான். என்றும் தனது MA பட்டப்படிப்பு ஆய்வில் பரசுராம பூமியில் வந்த "வரம்" சிறுகதை பற்றி ஆய்வுசெய்து கட்டுரை சமர்ப்பித்து சித்தி பெற்றதாகவும் அந்த கட்டுரையை விரிவுரையாளர் ஒருவர் கேட்டுப் பெற்றுக்கொண்டதாகவும் " கூறினார்.
அந்த கட்டுரையை நானும் பிரதி கேட்டேன் எடுத்து தருவதாககூறியுள்ளார். தந்ததும் பதிவேற்றுகிறேன்.
விநாயகர் சதுர்த்தியன்று இரண்டு விருதுகளுடன்.