வயது சிறுமிகள் இருவரை கண்டுபிடிக்க, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
லில்லி பாப்டிஸ்ட் என்ற 10 வயது சிறுமியும் காஷிஸ் டுச்சார்ம் என்ற 11 வயது சிறுமியுமே இவ்வாறு காணமல் போயுள்ளனர்.
இவர்களின் ஒளிப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், இவர்களின் அங்க அடையாளங்களையும் விபரித்துள்ளனர்.
இதில், பாப்டிஸ்ட் என்பவர், ஐந்து அடி உயரம், 100 பவுண்ஸ்கள், நீலம் மற்றும் கருப்பு நீளமுள்ள முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் கொண்டவர்
இதேபோல, டுச்சார்ம் என்பவர் ஐந்து அடி உயரம், கருப்பு நேரான முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் கொண்டவர் என பொலிஸார் விபரித்துள்ளனர்.
இவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை உடனடியாக தொடர்புக் கொள்ளுமாறு, பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.